கமலிடம் நடிகைகள் லிப்ஸை கண்டுபிடிக்க சொன்ன குஷ்பூ!


கமலிடம் நடிகைகள் லிப்ஸை கண்டுபிடிக்க சொன்ன குஷ்பூ!

ஜீ தமிழ் டிவியில் ‘சிம்பிளி குஷ்பூ’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் குஷ்பூ. சினிமா நட்சத்திரங்கள் இதில் பங்கு பெற்று வருகின்றனர். கடந்த வாரம் சிவகார்த்திகேயன் பங்கு பெற்றார். சமீபத்திய நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பங்கேற்றார்.

நிகழ்ச்சியின் நடுவே ‘ரம்பம்பம்.. ஆரம்பம்பம்….’ என்ற பாடலுக்கு இருவரும் டூயட் ஆடினர். இப்பாடல் இடம்பெற்ற ‘மைக்கேல் மதன காமராஜன்’ படத்தில் இவர்கள் இருவரும் இப்பாடலுக்கு நடனமாடியது நாம் அறிந்ததே.
இந்நிலையில் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கமலுடன் நடித்த நடிகைகள் பலரது லிப்ஸை மட்டும் காண்பித்தார் குஷ்பூ. முக்கியமாக கமல் முத்தமிட்ட உதடுகளை காண்பித்தார். நடிகைகள் வசுந்தராதாஸ், ராணி முகர்ஜி, கௌதமி, ஆண்ட்ரியா, சுகன்யா உள்ளிட்டோரின் உதடுகளை காண்பித்தார்.

கமலும் சளைக்காமல் சரியான விடைகளை அளித்தார். ஆனால் ஒரு சில உதடுகளை பார்த்து “ரொம்ப நாள் ஆயிச்சு… ஞாபகம் இல்லை” என்றார். சமீபத்தில் இவருடன் நடித்த ஆன்ட்ரியாவின் உதட்டை காண்பித்தபோது… “கமல் இது தெரியலை” என்றார்.

மேலும்… “நடிப்பதில் சிரமமான கேரக்டர் எது?” என்ற கேள்வியை கமலிடம் கேட்டார் குஷ்பூ. அதற்கு பதிலளித்த கமல்… “நீங்கள் என்னைப் பற்றி ஏதேதோ நினைக்கிறீர்கள். எனவே உங்கள் எண்ணங்களை ஏமாற்றாதபடி கமல்ஹாசனாக நடிக்க சிரமப்படுகிறேன்” என்றார்.