‘விஜய் 59’ படத்தை வாங்கிய ‘எந்திரன்’ படத்தயாரிப்பாளர்!


‘விஜய் 59’ படத்தை வாங்கிய ‘எந்திரன்’ படத்தயாரிப்பாளர்!

சிம்புதேவன் இயக்கிய ‘புலி’ படத்தை தொடர்ந்து அட்லி இயக்கத்தில் நடித்து வருகிறார் விஜய். இப்படத்திற்கு தலைப்பிட ‘காக்கி’ என்ற பெயரே பரிசீலனையில் உள்ளதாக தெரிகிறது. எனவே அத்தலைப்புடன் தீபாவளி தினத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும் எனத் தெரிகிறது.

இப்படத்தில் விஜய்யுடன் சமந்தா, எமிஜாக்சன், மீனா மகள் நைனிகா, கே.எஸ்.ரவிகுமார், ராதிகா சரத்குமார், இயக்குனர் மகேந்திரன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்க கலைப்புலி தாணு தயாரித்து வருகிறார்.

தற்போதுவரை இதன் படப்பிடிப்பு 75% முடிவடைந்துள்ளதாக கூறப்படுகிறது. சமந்தா சம்பந்தப்பட்ட காட்சிகள் முடிவடைந்ததை தொடர்ந்து இனி விஜய், எமி ஜாக்சன் நடிக்கவுள்ள காட்சிகளை படமாக்கவுள்ளார் இயக்குனர் அட்லி. இந்நிலையில் இப்படத்தின் வெளியீட்டு உரிமையை லைக்கா நிறுவனம் பெரும் தொகை கொடுத்து கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.

இதே லைக்கா நிறுவனம்தான் விஜய் நடித்த ‘கத்தி’ படத்தை தயாரித்திருந்தது. தற்போது ஷங்கர் இயக்கும் ரஜினியின் ‘எந்திரன் 2’ படத்தையும் தயாரிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.