அப்பாடா! அஜித்துக்கு தங்கச்சியா லக்ஷ்மிமேனன் கிடைச்சாச்சு!


அப்பாடா! அஜித்துக்கு தங்கச்சியா லக்ஷ்மிமேனன் கிடைச்சாச்சு!

படத்திற்கு ஹீரோயின் தேடுவதை விட அஜித் போன்ற மாஸ் ஹீரோக்களுக்கு தங்கச்சி தேடுவதுதான் கஷ்டம் போல. வீரம் படத்தை அடுத்து சிவா இயக்கத்தில் ‘அச்சமில்லை’ படத்தில்  நடிக்கவிருக்கிறார் அஜித். இவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிப்பதாக தெரிகிறது.

படத்தின் முக்கிய கேரக்டரில் சந்தானம் நடிக்கவிருக்கிறார். மற்ற கதாபாத்திரங்களின் தேர்வு ஒரு புறம் நடந்தாலும் படத்தில் அஜித்தின் தங்கை கேரக்டருக்கு ஒரு நாயகியும் கிடைக்கவில்லையாம். எனவே தேடுதல் வேட்டை பலத்த தீவிரமடைந்தது.

பிந்துமாதவி, ஸ்ரீதிவ்யா, நித்யாமேனன் இப்படி பலரையும் அஜித்துக்கு தங்கையாக நடிக்க பேசி பார்த்தனர். அனைவரும் எஸ்கேப் ஆகிவிட இறுதியில் நான் எதற்கும் தயார் என்று தைரியலக்ஷ்மியாக முன்வந்து ஒப்புக் கொண்டார் லக்ஷ்மிமேனன். அனிருத் இசையில் உருவாகவிருக்கும் ‘அச்சமில்லை’ படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. அடுத்த மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு கொல்கத்தாவில் தொடங்க இருக்கிறது.

இப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரிக்கிறார். ‘ஆரம்பம்’, ‘என்னை அறிந்தால்’ படத்தினை தொடர்ந்து 3வது முறையாக அஜித்துடன் இணைகிறார். இரண்டு வெற்றி படங்களை கொடுத்த இக்கூட்டணி 3வது வெற்றியும் கொடுத்து ஹாட்ரிக் அடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.