தல 56’ படத்திற்காக இணையும் அஸ்வின்-லட்சுமிமேனன்!


தல 56’ படத்திற்காக இணையும் அஸ்வின்-லட்சுமிமேனன்!

கௌதம்மேனனின் ‘நடுநிசி நாய்கள்’ படத்தில் அறிமுகமாகியிருந்தாலும் அஜித்தின் ‘மங்காத்தா’ படமே அஸ்வினுக்கு அமர்க்களமாய் அமைந்தது. தொடர்ந்து ‘ஏழாம் அறிவு’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

இதன்பின்னர் ‘மேகா’ படத்தில் தனி ஹீரோவாக களம் இறங்கினார். இதில் இவருடன் ஸ்ருஷ்டி டாங்கே நடித்திருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற ‘புத்தம் புது காலை…’ என்ற பாடல் இந்த ஜோடியை ஒவ்வொரு இல்லங்களிலும் கொண்டு சேர்த்தது. தற்போது ‘ஜீரோ’, ‘திரி’, ‘தல 56’, ‘தொல்லைகாட்சி’ ஆகிய படங்களில் பிஸியாக நடித்துவருகிறார்.

இந்நிலையில் ‘தல 56’ படக்குழுவினர் சமீபத்தில் இத்தாலியில் படப்பிடிப்பை முடித்துவிட்டு இந்தியா திரும்பியுள்ளனர். இவர்கள் தற்போது அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக கொல்கத்தா செல்லவிருக்கின்றனர். இதில் அஜித்துடன் ஸ்ருதிஹாசன், லட்சுமிமேனன், அஸ்வின் ஆகியோரும் செல்கின்றனர். கொல்கத்தாவை சுற்றியுள்ள பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறது. இப்படத்தில் அஜித்தின் தங்கையாக லட்சுமிமேனன் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக அஸ்வின் நடிக்கவிருக்கிறார் என்று கூறப்படுகிறது.