தனுஷ், விஜய்சேதுபதி படங்களுக்கு கதை கேட்க முடியுமா..? – லட்சுமி மேனன்


தனுஷ், விஜய்சேதுபதி படங்களுக்கு கதை கேட்க முடியுமா..? – லட்சுமி மேனன்

ஜிகர்தண்டா படத்தில் கயல்விழி, கொம்பன் படத்தில் பழனி, வேதாளம் படத்தில் தமிழ் மற்றும் மிருதன் படத்தில் ரேணுகா என தன்னுடைய படங்களில் தன் கேரக்டரை பேசவைத்தவர் லட்சுமிமேனன்.

இவரது படங்கள் பெரும் ஹிட்டடித்து இவர் ராசியான நடிகை என்று பெயர் எடுத்தாலும், சமீபகாலமாக படங்களை இவர் ஒப்புக் கொள்ளவில்லை.

இந்நிலையில் எவரும் எதிர்பாராத வகையில் கார்த்திக் சுப்புராஜ்-தனுஷ் இணையும் படத்தில் நாயகியாக நடிக்கவிருக்கிறார்.

மேலும் விஜய் சேதுபதி நடிக்கும் ரெக்க படத்திலும் நடிக்கவிருக்கிறார்.

இந்த இரு படங்களிலும் இவர் கதை கேட்காமல் நடிக்க ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து லட்சுமி மேனன் கூறியதாவது….

“தனுஷ், விஜய்சேதுபதி இருவரும் பெரிய நடிகர்கள். நல்ல கதைகளில் மட்டும்தான் அவர்கள் நடிக்கிறார்கள். எனவே அவர்கள் படத்தில் நடிக்க, நான் கதை கேட்கவில்லை” என்றார்.