விஜய் சேதுபதியுடன் நெருக்கமான லட்சுமி மேனன்..!


விஜய் சேதுபதியுடன்  நெருக்கமான லட்சுமி மேனன்..!

நாம் அன்றாடம் பார்க்கும் ஒரு யதார்த்தமான மனிதராகவே படங்களில் நடித்து வந்தார் விஜய்சேதுபதி. இதனால் இவருக்கு அதிகளவில் ரசிகர் பட்டாளம் உருவானது.

ஆனால் அண்மையில் வெளியான சேதுபதி படம் இவருக்கான மாஸ் ஹீரோ இமேஜை உருவாக்கியது. எனவே இந்த பாணியை தொடர முடிவு செய்திருக்கிறாராம்.

இவர் அடுத்த நடிக்கவுள்ள றெக்க படத்தில் முழு ஆக்ஷன் ஹீரோவாக அவதாரம் எடுக்கிறார். எனவே படத்தில் நிறைய பன்ஞ் டயலாக்குகளும் சேர்க்கப்பட்டுள்ளதாம்.

வா டீல் படத்தை இயக்கிய ரத்தின சிவா இப்படத்தை இயக்குகிறார். ஆரஞ்சு மிட்டாய் படத்தை தொடர்ந்து விஜய்சேதுபதியின் நண்பர் பி.கணேஷ் இப்படத்தையும் தயாரிக்கிறார்.

இதில் சேதுபதிக்கு ஜோடியாக லட்சுமிமேனன் நடிக்கிறார். இதற்கான போட்டோ ஷூட் ஏவிஎம் ஸ்டூடியோ அரங்கில் நடைபெற்றது. புகைப்பட கலைஞர் ஜி.வெங்கட்ராமன் படங்களை எடுத்து வருகிறார்.

இதில் விஜய் சேதுபதியும், லட்சுமி மேனனும் மிகவும் நெருக்கமாக இருப்பது போன்று படங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது.