அஜித், ரவி அடுத்து சிம்புவுடன் இணையும் லட்சுமி மேனன்!


அஜித், ரவி அடுத்து சிம்புவுடன் இணையும் லட்சுமி மேனன்!

‘கொம்பன்’ படத்தை அடுத்து லட்சுமிமேனன், சிவா இயக்கும் ‘அச்சமில்லை’ படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். எந்த முன்னணி நாயகியும் முன்வராத நிலையில் இப்படத்தில் அஜித்தின் தங்கையாக நடிக்க ஒப்புக் கொண்டு திரையுலகை ஆச்சரியப்படுத்தியுள்ளார் இவர்.

இவர்களுடன் ஸ்ருதிஹாசன் மற்றும் சந்தானம் நடிக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அனிருத் இசையில் உருவாகவிருக்கும் இப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரிக்கிறார். விரைவில் இதன் படப்பிடிப்பு கொல்கத்தாவில் தொடங்க இருக்கிறது.

இதனையடுத்து ‘நாய்கள் ஜாக்கிரதை’ படத்தைய இயக்கிய சக்திராஜன்  இயக்கத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நடிக்கவிருக்கிறார் லட்சுமி. இன்னும் பெயரிடப்படாத இப்புதிய படத்தை மைக்கேல் ராயப்பனின் ‘குளோபல் இன்போடெயின்மெண்ட்’ நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

இந்நிலையில் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் சிம்பு ஜோடியாக ஒரு புதிய படமொன்றிலும் லட்சுமிமேனன் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எக்ஸ்ட்ரா தகவல் : நடிப்பு மட்டுமில்லாமல் பேஷன் டிசைனிங் கற்றுக் கொள்வதற்காக அடிக்கடி பெங்களுர் பறந்து செல்கிறார் லட்சுமிமேனன் என்பது குறிப்பிடத்தக்கது.