முத்தையாவுடன் காதலா…? மனம் திறந்த லட்சுமி மேனன்..!


முத்தையாவுடன் காதலா…? மனம் திறந்த லட்சுமி மேனன்..!

இயக்குனர் முத்தையா இயக்கிய ‘குட்டிப்புலி’ மற்றும் ‘கொம்பன்’ ஆகிய இரண்டு படங்களிலும் நாயகியாக லட்சுமி மேனன் நடித்தார். முத்தையா தற்போது இயக்கி வரும் விஷாலின் ‘மருது’ படத்திலும் லட்சுமியே நாயகியாக நடிக்கவிருந்த நிலையில் விஷால் மறுத்தார்.

அதனால்தான் மருதுவில் விஷால் ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடித்து வருகிறார்.

விஷால் மறுத்தால் என்ன…? விடுவாரா முத்தையா… தான் அடுத்து இயக்கவுள்ள படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக லட்சுமி மேனனையே ஒப்பந்தம் செய்துவிட்டாராம்.

விக்ரம் பிரபுவும் தன் ‘கும்கி’ நாயகிதானே என்று ஓகே சொல்லிவிட்டாராம்.

நிலைமை இப்படியிருக்க… ஒருவேளை முத்தையா லட்சுமியை காதலிக்கிறாரோ? என்ற டவுட்டை கிளியர் செய்ய லட்சுமி மேனனிடம் கேட்டபோது…

“எனக்கு அவர் மீது காதல் இல்லை. அவருக்கு இருக்கா? என்பது எனக்கு தெரியாது” என்று ரொம்பவே கேஷ்வலாக கூறினார் லட்சுமி.