“என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா” அட படத்தலைப்பே இதாங்க…


“என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா”  அட படத்தலைப்பே இதாங்க…

‘ஜீ’ தமிழ் தொலைக்காட்சியில் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் அடுத்தவர்களின் அந்தரங்கத்தை அலசி ஆராய்ந்து ‘சொல்வதெல்லாம் உண்மை’ என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். அதில் கலந்து கொள்ளும் பெண்களைப் பார்த்து இவர் அடிக்கடி சொல்லும் வார்த்தைதான் ‘என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா.’
ஒரு பிரபல தொலைக்காட்சியில் இந்த டயலாக்கை கிண்டல் செய்து ஒரு நகைச்சுவை நிகழ்ச்சியை ஒளிபரப்பினர். இதனால், என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா என்ற இந்த டயலாக் பிரபலமானது.
தற்போது, பர்ஸ்ட் பிரேம் என்ற நிறுவனம் தயாரிக்கும் படத்துக்கு இதையே டைட்டிலாக வைத்துள்ளனர். கங்காதரன் என்ற புதியவர் இயக்கும் இந்தப் படத்தில் புதுமுகங்கள் நடிக்கின்றனர்.

Related