கணவரை பிரிந்த ‘எங்கேயும் எப்போதும்’ பட பாடகி மரணம்..!


கணவரை பிரிந்த ‘எங்கேயும் எப்போதும்’ பட பாடகி மரணம்..!

மலையாள சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளர் ஜான்சன். இவர் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் காலமானார். இவரது மகள் ஷான் (32) என்பவர் தமிழில் ‘எங்கேயும் எப்போதும்’, ‘பறவை’ உள்ளிட்ட படங்களில் பின்னணி பாடியுள்ளார்.

கணவரை பிரிந்து வாழும் இவர் சென்னையில் வசித்து வருகிறார். தற்போது மார்க்கெட்டிங் மேலாளராக தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று இவர் சந்தேகமான முறையில் மரணம் அடைந்துள்ளார். அவரது உடல் முழுவதும் கருப்பு நிறமாக மாறி இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், அவருக்கு இதற்கு முன்பே வலிப்பு நோய் இருந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.