இறங்கி அடிக்கும் ‘கபாலி’… ரிலீசுக்கு முன்பே ரூ. 180 கோடி…?


இறங்கி அடிக்கும் ‘கபாலி’… ரிலீசுக்கு முன்பே ரூ. 180 கோடி…?

சூப்பர் ஸ்டார் ரஜினியின் கபாலி ரிலீசுக்கு இன்னும் சரியாக 30 நாட்கள் மட்டுமே உள்ளன. இப்படம் ஜூலை 1ஆம் தேதி வெளியாகிறது.

இந்நிலையில் இப்படத்தின் எதிர்பார்ப்பு விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வருகிறது.

மலாய் மொழியில் இப்படம் டப் செய்யப்படுவதால் மலேசியா, சிங்கப்பூர், சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளிலும் இதன் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

இவை தவிர்த்து அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஐரோப்பிய உள்ளிட்ட நாடுகளிலும் ஹாலிவுட் படங்களுக்கு நிகராக எதிர்பார்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.

எனவே, விநியோகஸ்தர்கள் மத்தியில் இப்படத்தின் உரிமையை பெற கடும் போட்டி உருவாகியுள்ளது.

உலகம் முழுவதும் சுமார் 5000 திரையரங்குகளில் கபாலி வெளியாகலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் தயாரிப்பாளர் தாணுவே ரிலீஸ் செய்வார் என கூறப்படுகிறது.

ஆனால் செங்கல்பட்டு ஏரியாவை மட்டும் மும்பையை சேர்ந்த ஒரு நிறுவனம் ரூ.15 கோடிக்கு மேல் கேட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

தற்போது விநியோக உரிமை பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதால். ரிலீசுக்கு முன்பே ரூ. 180 கோடியை கபாலி கடந்துவிடுவார் எனவும் கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது