வேந்தர் மூவிஸ் தயாரிக்க லாரன்ஸின் புதிய படம்!


வேந்தர் மூவிஸ் தயாரிக்க லாரன்ஸின் புதிய படம்!

அண்மையில் வந்த படங்களில் பெரிதாக பேசப்பட்ட படங்களில் காஞ்சனாவும் ஒன்று. காஞ்சனா-2 படத்தில் லாரன்ஸ் இரு வேடங்களில் நடித்திருந்தார். மொட்ட சிவா, கெட்ட சிவா என்ற லாரன்ஸின் பன்ச் வசனம் இன்றும் பெரிதாக பேசப்பட்டு வருகிறது.

இவருடன் டாப்ஸி, கோவை சரளா, மயில்சாமி, மனோபாலா, ஸ்ரீமன், நித்யாமேனன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். மேலும் இப்படத்தில் லாரன்ஸின் வெகுளித்தனமான நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதனால் குழந்தைகள் முதல் தாய்மார்கள் வரை குடும்பம் குடும்பமாக தியேட்டரை நோக்கி படையெடுத்தனர்.

தமிழகத்தை கலங்கடித்த இந்த காஞ்சனா பேய் ஆந்திராவையும் விட்டு வைக்கவில்லை. அங்கும் சூப்பர் ஹிட்டடிக்கவே லாரன்ஸின் நடிப்பு மற்றும் இயக்கத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ரஜினி, விஜய் உள்ளிட்ட திரையுலகினர் பலரும் லாரன்ஸை பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் வேந்தர் மூவிஸ் நிறுவனத்திற்காக லாரன்ஸ் ஒரு புதிய படத்தை இயக்கி நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். இப்படம் காஞ்சனாவின் தொடர்ச்சி பாகமா அல்லது புதிய படமா எனத் தெரியவில்லை. ஆகஸ்ட் மாதம் இதன் படப்பிடிப்பு துவங்கவிருக்கிறது. படத்தின் தலைப்பு, கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.

 

Summary:

Raghava Lawrence direct and plays lead role in Vendhar movies production. Shooting starts from August.