குழந்தைகளே உஷார்; மறுபடியும் ‘காஞ்சனா-2′ பேய் வருது!


குழந்தைகளே உஷார்; மறுபடியும் ‘காஞ்சனா-2′ பேய் வருது!

சன் பிக்சர்ஸ் வழங்க ‘ராகவேந்திரா புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘காஞ்சனா-2’. இப்படத்திற்கு சென்சாரின் ‘யு/ஏ’ சான்றிதழ் கிடைத்துள்ள நிலையில் படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்திருக்கிறார்கள்.

ராகவா லாரன்ஸ் இதற்கு முன் இயக்கி நடித்த ‘முனி’ படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இப்படத்தில் லாரன்ஸ், ராஜ்கிரண், வேதிகா, கோவை சரளா, வினுசக்கரவர்த்தி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து முனி 2ஆம் பாகம் காஞ்சனா என்ற பெயரில் வெளியானது.

இரண்டாம் பாகத்தில் லாரன்ஸ், சரத்குமார், லஷ்மி ராய், கோவை சரளா, தேவதர்ஷினி மற்றும் ஸ்ரீமன் நடித்திருந்தனர். இப்படமும் வெற்றி பெறவே இதன் தொடர்ச்சியாக தற்போது முனி -3 படத்தை காஞ்சனா-2 பாகமாக வெளியிட இருக்கிறார் லாரன்ஸ். இப்படத்தில் இவருடன் டாப்சி, கோவை சரளா, நித்யா மேனன், ஜாங்கிரி மதுமிதா, ரேணுகா, ஜெயப்பிரகாஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.

படம் ஏப்ரல் 17ஆம் தேதி வெளிவருகிறது என அறிவித்துள்ளனர். இப்படத்தின் பாகங்கள் தொடர்ச்சியாக வெற்றி பெற்று  வருவதால் வரவிருக்கும் காஞ்சனா 2 படத்திற்கு பலத்த எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இப்படத்தின் வியாபாரம் பெரிய அளவில் நடந்திருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தை உலகம் முழுக்க விநியோகிக்கும் உரிமையை ‘ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் வாங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.