ரஜினி தொடங்கிய வழியில்… லாரன்ஸ்-சூர்யா-ஜெய்..!


ரஜினி தொடங்கிய வழியில்… லாரன்ஸ்-சூர்யா-ஜெய்..!

ரஜினிகாந்து நடித்து சந்திரமுகி வெளியாகி கிட்டதட்ட 11 வருடங்கள் ஆகிவிட்டது.

ஆனாலும் இந்த பேய் கதைகள் தமிழ் சினிமாவை விட்ட பாடில்லை.

ரஜினி ஒரு மிகப்பெரிய சூப்பர் ஸ்டார். அவரே பேய் கதையில் நடித்தபோது நாம் நடித்தால் என்ன எண்ணி ஒவ்வொரு முன்னணி ஹீரோக்களும் அந்த வழியில் தொடர்கின்றனர்.

இதில் பலமாக வெற்றிக்கொடி நாட்டியர் லாரன்ஸ்தான். முனி படத்தை தொடர்ந்து காஞ்சனா, காஞ்சனா 2 என தொடர்ந்து பயணித்து வருகிறார்.

அதன்பின்னர் சூர்யாவும் மாஸ் படத்தில் பேய் வேடத்தில் நடித்தார். தற்போது ஜெய்யும் இந்த பேய் பட ரூட்டுக்கே வந்துவிட்டார்.

70 எம் எம் நிறுவனத்தை சேர்ந்த டி என்.அருண் பாலாஜி, கந்தவேல் மற்றும் பார்மர்ஸ் மாஸ்டர் ப்ளான் நிறுவனம் சார்பாக திலிப் சுப்புராயன் ஆகியோர் தயாரிக்கும் படத்தில் நடிக்கிறார் ஜெய்.

அறிமுக இயக்குனர் சினிஷ் இயக்கும் இப்படத்தில் ஜெய் மூன்று வேடங்களில் நடிக்கிறார். நாயகி தேர்வு நடைபெற்று வருகிறது.

1989 முதல் 2016 வரை உள்ள காலக்கட்டத்தை பிண்ணணியாக கொண்டு இப்படம் உருவாக்கப்படவிருக்கிறதாம்.