முதல் மக்கள் தொடர்பாளர் பிலிம் நியூஸ் ஆனந்தன் மரணம்..!


முதல் மக்கள் தொடர்பாளர் பிலிம் நியூஸ் ஆனந்தன் மரணம்..!

தமிழ் சினிமாவின் தகவல் களஞ்சியம் என ரசிக பெருமக்களால் அன்போடு அழைக்கப்பட்டவர் பிலிம் நியூஸ் ஆனந்தன்.

இவர் இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 88.

தமிழ் சினிமா தொடங்கிய காலம்முதல் அனைத்து தகவல்களையும் ஒன்று திரட்டி வைத்திருப்பவர் இவர் ஒருவர் மட்டுமே.

திரைப்படங்களுக்கு மக்கள் தொடர்பாளர் ஒருவர் தேவை என்பதை அறிமுகப்படுத்தியவர் இவர்தான்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனை முதன்முதலாக பேட்டி எடுத்தவர் இவர்தான்.

இவரது தள்ளாத வயதிலும் படங்கள் பற்றிய குறிப்புகளை இவர் கொடுத்து வருவதை யாராலும் மறக்க முடியாது.

மறைந்த முதல் அமைச்சர் எம் ஜி ஆருடன் நெருக்கமாக இருந்தவர் இவர். மேலும் முன்னாள் முதல்வர் கருணாநிதி, இன்றைய முதல்வர் ஜெயலலிதா ஆகியோருடனும் நல்ல தொடர்பில் இருப்பவர் இவர்.

தமிழ் திரையுலக வரலாறு பற்றிய அவரது புத்தகத்தை தமிழக அரசு வெளியிட்டது இவரது பணிக்கு கிடைத்த பெருமை.

தமிழக அரசு இவருக்கு கலைமாமணி விருது வழங்கி கௌரவித்துள்ளது.