தற்கொலை செய்து கொண்ட சாய் பிரசாந்தின் கடிதம் சிக்கியது…


தற்கொலை செய்து கொண்ட சாய் பிரசாந்தின் கடிதம் சிக்கியது…

நடிகர் சாய் பிரசாந்த் நேற்று சென்னை, வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். அவர் மனைவி சுஜிதாவுக்கு எழுதிய கடிதம் ஒன்று தற்போது சிக்கியுள்ளது.

அந்தக் கடிதத்தில் அவர் எழுதியுள்ளதாவது…

அன்புள்ள சுஜிதா சாய் பிரஷாந்துக்கு…

“உன்னை மிகவும் நேசித்தேன். பொஸஸிவ் காரணமாக உன்னை நான்கு முறை அடித்து விட்டேன். நீ கவலைப்படாதே… எனது தற்கொலைக்கு நீ காரணம் கிடையாது. உன்னுடைய 33 சவரன் நகை கண்டிப்பாக திரும்பி கிடைக்கும்.

என் பெற்றோர்கள் உன்னை நிச்சயம் கேள்வி கேட்க மாட்டார்கள். நீயும் ரக்‌ஷிதா (மகள்) அழ வேண்டாம். உன் சித்தப்பா என் அப்பாவிடம் உபயோகித்த கடுமையான வார்த்தைகளுக்காக மன்னிப்பு கேட்கச் சொல்.

 

Letter 1

 

நான் மட்டுமே எனது மரணத்திற்குக் காரணம். என் குடும்பத்தார் உனக்கு ஐந்து லட்சம் பணம் மற்றும் நகைகளை கொடுப்பார்கள். நான் ரக்‌ஷிதாவுக்கு எப்போதும் ஒரு நல்ல அப்பா. எனது மரணத்திற்குப் பிறகாவது தயவு செய்து உனது கோபத்தை விட்டுவிடு.

மிஸ் யூ ரக்‌ஷிதா, சுஜிதா, அம்மா, அப்பா, சுஜி சித்தப்பா, நிரஞ்சனா குடும்பம், ராகுல் மற்றும் ரோகித், சுஜிதா குடும்பம்

இரண்டாவது பக்கத்தில்…

ரக்‌ஷிதாவுக்காக

யாரும் சண்டை போட வேண்டாம். நான் மட்டுமே எனக்கு பிரச்னை. எல்லோரும் ஒற்றுமையாக இருங்கள். புரிந்துக் கொள்ளுங்கள்.

ராடான் மீடியா மற்றும் சன் நெட்வொர்க், என் அம்மா (ராதிகா சரத்குமார்) ஆகியோருக்கு நன்றி. மிஸ் யூ லாட் அம்மா, ரக்‌ஷிதாவுக்கு எனது ஆசீர்வாதங்கள் எப்போதும் உண்டு.

லவ் யூ தாமரை டீம், மற்றும் சுகுமார் அண்ணா. நன்றி நிரஞ்சனா குடும்பத்தார்.

 

Letter First

 

“லவ் யூ மேட்லி சுஜிதா… முத்தங்கள்…

உங்களை எல்லாம் சிரிப்புடன் விட்டுச் செல்கிறேன்.

இவ்வாறாக அந்தக் கடிதத்தில் எழுதியுள்ளார்.

ஏற்கெனவே நிரஞ்சனா என்ற பெண்ணை திருமணம் செய்து பின்பு விவாகரத்து பெற்றவர் சாய் பிரசாந்த். சுஜிதா இவரது இரண்டாவது மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.