விஜய் காட்டிய பாதையில் செல்லும் த்ரிஷா!


விஜய் காட்டிய பாதையில் செல்லும் த்ரிஷா!

நடிகர்கள் விஜய், ஜீவா, கஞ்சா கருப்பு போன்றோருக்கு மேனேஜராக இருப்பவர் பி.டி.செல்வகுமார். இவர் சில வருடங்களுக்கு முன்பு இயக்குனராக அறிமுகமானார். வினய், சத்யன், ப்ரேம்ஜி, லஷ்மிராய் உள்ளிட்டோர் நடித்த ‘ஒன்பதுல குரு’ படத்தை இயக்கியிருந்தார்.

இவர் தற்போது தயாரிப்பாளராகவும் உயர்ந்து விட்டார் என்பது அனைவரும் அறிந்ததே. சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஹன்சிகா, ஸ்ருதி, பிரபு, ஸ்ரீதேவி ஆகியோர் நடித்து வரும் ‘புலி’ படத்தை தயாரித்து வருகிறார் அல்லவா. தற்போது இவரை தொடர்ந்து த்ரிஷாவின் மேனேஜரும் தயாரிப்பாளராகவிருக்கிறார்.

த்ரிஷாவின் மேனேஜராக பணிபுரிந்த கிரிதர் என்பவரின் படத்தில் நடிக்க த்ரிஷா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். “கிரிதர் புரொடக்ஷன்ஸ் ஹவுஸ்” என்ற நிறுவனம் சார்பில் தயாராக இருக்கும் இப்படத்தை கோவி என்பவர் இயக்கவிருப்பதாக தெரிகிறது.

இதுகுறித்து தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் த்ரிஷா கூறியிருப்பதாவது… ‘என்னுடைய மேனேஜரின் கிரிதர் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிக்கப்படும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறேன்.   இதுவரை நான் நடிக்காத கேரக்டர் என்பதால் உடனடியாக ஒப்புக்கொண்டேன்’ என்று தெரிவித்திருந்தார்.

த்ரிஷா தற்போது ஜெயம் ரவியுடன் ‘பூலோகம்’, சுராஜ் இயக்கத்தில் அஞ்சலியுடன் ‘அப்பாடக்கரு’ மற்றும் ஓவியா, பூனம் பஜ்வா ஆகியோருடன் ‘போகி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.