பழைய பாதைக்கே திரும்பிய லிங்குசாமி.!


பழைய பாதைக்கே திரும்பிய லிங்குசாமி.!

வழக்கு எண் 18/9, கும்கி, கோலி சோடா, மஞ்சப்பை உள்ளிட்ட தரமான படங்களை கொடுத்து வரும் ஒரு தயாரிப்பாளராக தற்போது அறியப்பட்டாலும், பல வெற்றிப் படங்களை இயக்கியவர் லிங்குசாமி.

ஆனால் இவர் கத்துகிட்ட மொத்த வித்தையும் இறக்கிய சூர்யாவின் அஞ்சான் படம் சரியாக போகவில்லை. எனவே, படங்களை தயாரிப்பதில் மட்டுமே கவனமாக இருந்தார்.

இவர் பெரிதும் நம்பிய கமலின் உத்தமவில்லனும் இவரது காலை வாரி விடவே சிவகார்த்திகேயனின் ரஜினிமுருகனை பெரிதும் நம்பினார்.

ரஜினிமுருகன் படத்தின அபார வெற்றி, லிங்குசாமியை மீண்டும் தன் பழைய பாதைக்கு திருப்பியிருக்கிறதாம்.

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்கவுள்ள ஒரு படத்தை விரைவில் இயக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் பையா படத்தின் இந்தி ரீமேக்கை இயக்குகிறார். இதில் வித்யுத் ஜம்வால் ஹீரோவாக நடிக்கிறார்.

இதனைத் தொடர்ந்து விஷால் நடிக்க, சண்டக்கோழி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கவிருக்கிறார்.