விஜய் பாடிய பாடல்கள், படங்கள் பற்றிய தொகுப்பு!


விஜய் பாடிய பாடல்கள், படங்கள் பற்றிய தொகுப்பு!

விஜய் நடிப்பு மட்டுமில்லாமல் நடனம், பாடல் என அனைத்திலும் கைதேர்ந்தவர். இவரும் நடிகர் கமல்ஹாசனை போல தன் படங்களில் பாடல்களை பாடி வருகிறார். இவர் நடிக்காத சில படங்களிலும் பாடல்களை பாடியுள்ளார். விஜயகாந்த் மற்றும் சூர்யா இணைந்து நடித்த ‘பெரியண்ணா’ படத்தில் சூர்யாவுக்காக பாடல்களை பாடியுள்ளார். மேலும் வேலை என்ற படத்திலும் ஒரு பாடலை பாடியுள்ளார்.

இந்நிலையில் சமீபத்திய ‘வாங்கண்ணா வணக்கங்கண்ணா…’, ‘செல்ஃபிபுள்ள…’, ‘ஏண்டி… ஏண்டி…’ ஆகிய பாடல்களைத் தொடர்ந்து ‘விஜய் 59’ படத்திலும் ‘செல்லக்குட்டி’ என்ற ஒரு பாடலை பாடியுள்ளார். இப்பாடலுக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

அப்படியென்றால் விஜய் மொத்தம் பாடிய பாடல்கள் எத்தனை? எந்தெந்த படங்களில் பாடியுள்ளார்? என்று தெரிய வேண்டாமா? இதோ உங்களுக்காக… (இசையமைப்பாளர் பெயர்களை அடைப்புக்குறியில் குறிப்பிட்டுள்ளோம்)
1. பம்பாய் சிட்டி சுக்கா ரொட்டி – ரசிகன் – (தேவா)
2. ஒரு கடிதம் எழுதினேன் – தேவா – (தேவா)
3. அய்யய்யோ அலமேலு ஆவின் பசும்பாலு – தேவா – (தேவா)
4. கோத்தகிரி குப்பம்மா – தேவா – (தேவா)
5. தொட்டபெட்டா ரோட்டு மேல – தேவா – (தேவா)
6. பம்பாய் பார்ட்டி ஷில்பா ஷெட்டி – கோயம்புத்தூர் மாப்பிள்ளை – (வித்யாசாகர்)
7. திருப்பதி போனா மொட்டை – மாண்புமிகு மாணவன் – (சபேஷ் முரளி)
8. சிக்கன் கறி – செல்வா – (சிற்பி)
9. அஞ்சாம் நம்பர் பஸ்ஸில் – காலமெல்லாம் காத்திருப்பேன் – (தேவா)
10. ஊர்மிளா ஊர்மிளா – ஒன்ஸ்மோர் – (தேவா)
11. ஓ பேபி பேபி – காதலுக்கு மரியாதை – (இளையராஜா)
12. மெளரியா மெளரியா – பிரியமுடன் – (தேவா)
13. காலத்துக்கேத்த ஒரு கானா – வேலை – (யுவன் சங்கர் ராஜா)
14. நிலவே… நிலவே…. – நிலாவே வா – (வித்யாசாகர்)
15. சந்திரமண்டலத்தை – நிலாவே வா – (வித்யாசாகர்)
16. நான் தம்மடிக்கிற ஸ்டைல பாத்து – பெரியண்ணா – (பரணி)
17. ஜூட்டடி லைலா – பெரியண்னா – (பரணி)
18. ரோட்டுல ஒரு – பெரியண்னா – (பரணி)
19. தங்கநிறத்துக்கு – நெஞ்சினிலே – (தேவா)
20. மிஸ்ஸிசிப்பிநதி குலுங்க – பிரியமானவளே – (எஸ்.ஏ.ராஜ்குமார்)
21. என்னோட லைலா – பத்ரி – (ரமணகோகுலா)
22. உள்ளத்தைக் கிள்ளாதே – தமிழன் – (இமான்)
23. கொக்கோ கோலா – பகவதி – (தேவா)
24. வாடி வாடி வாடி – சச்சின் – (தேவி ஸ்ரீபிரசாத்)
25. கூகுள் கூகுள் – துப்பாக்கி – (ஹாரிஸ் ஜெயராஜ்)
26. வாங்கண்ணா வணக்கங்கண்னா – தலைவா – (ஜி.வி.பிரகாஷ்)
27. செல்ஃபி புள்ள – கத்தி – (அனிருத்)
28. ஏண்டி ஏண்டி – புலி – (தேவி ஸ்ரீபிரசாத்)
29. செல்லக்குட்டி – விஜய் 59 – (ஜி.வி.பிரகாஷ்)

‘விஜய் 59’ படத்தில் மற்றொரு பாடலையும் விஜய் பாடவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.