உலகம் முழுவதும் உள்ள விஜய் ரசிகர்களுக்கு தாணு தரும் இன்ப அதிர்ச்சி..!


உலகம் முழுவதும் உள்ள விஜய் ரசிகர்களுக்கு தாணு தரும் இன்ப அதிர்ச்சி..!

வருகிற மார்ச் 20ஆம் தேதி விஜய்யின் தெறி படத்தின் பாடல்கள் வெளியாகவுள்ளது. இதற்கான விழா சென்னை சத்யம் திரையரங்களில் நடக்கிறது.

இதில் திரையுலகைச் சேர்ந்த பலரும் கலந்துக் கொள்ளவுள்ளனர்.

இதுவரை இல்லாத அளவிற்கு படத்திற்கும் பாடல்களுக்கும் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

எனவே விஜய் ரசிகர்களுக்காக அன்றைய தினமே படத்தின் ட்ரைலரையும் வெளியிடவிருக்கின்றனர்.

இந்த மகிழ்ச்சியான செய்தியை மேலும் இரட்டிப்பாக முடிவு செய்து இருக்கிறாராம் தாணு.

இந்த நிகழ்ச்சியினை நேரலையாக ரசிகர்களுக்கு விருந்தளிக்க போகிறாராம்.

எனவே, இதற்கான ஏற்பாடுகளை படக்குழுவினர் மும்முரமாக செய்து வருவதாக கூறப்படுகிறது.