‘அச்சம் என்பது மடமையடா’ வெளியிடவில்லை.. அஞ்சிய லைக்கா?


‘அச்சம் என்பது மடமையடா’ வெளியிடவில்லை.. அஞ்சிய லைக்கா?

லைக்கா நிறுவனம் தற்போது ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 2.ஓ என்ற படத்தை தயாரித்து வருகிறது. இப்படம் அதிக பட்ஜெட்டில் அதாவது ரூ. 350 கோடியில் தயாரிக்கப்பட்டு வருகிறது. மேலும் ஜி.வி. பிரகாஷ் நடிக்க பெயரிடப்படாத ஒரு படத்தையும் தயாரிக்கிறது.

இவற்றைத் தொடர்ந்து தமிழில் ஜெயம் ரவி நடிக்கவிருக்கும் படம், பொன்ராம் இயக்கும் படம், கமலின் ‘மருதநாயகம்’ ஆகிய படங்களைத் தயாரிக்கவுள்ளதாக செய்திகள் வந்தன.

தயாரிப்பு மட்டுமில்லாமல் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, மஞ்சிமா நடித்து வரும் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் உரிமையையும் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இது குறித்து விளக்கம் அளித்துள்ள லைக்கா நிறுவனம்… “தனுஷ் தயாரித்து வெற்றிமாறன் இயக்கியுள்ள ‘விசாரணை’ படம் தவிர வேறு எந்த படத்தையும் எங்கள் நிறுவனம் வெளியிடவில்லை.

மேலும் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘2.ஓ’ மற்றும் ஜிவி பிரகாஷ் நடிக்கும் படம் ஆகிய இரு படங்களை மட்டுமே தற்போது தயாரித்து வருகிறோம்” என்று கூறி பல்வேறு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.