ரஜினி, கமல், விஜய் மட்டும்தான்… தனுஷ் இல்லை என மறுத்த நிறுவனம்..!


ரஜினி, கமல், விஜய் மட்டும்தான்… தனுஷ் இல்லை என மறுத்த நிறுவனம்..!

தமிழில் உருவாகி வரும் முன்னணி நட்சத்திரங்களின் படங்களை பிரபல லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. மேலும் சில படங்களை வாங்கி வெளியிட்டும் வருகிறது.

இந்நிலையில் சில நாட்களாக தனுஷ் தயாரித்து நடித்துள்ள கொடி படத்தை லைகா வெளியிடவுள்ளதாக செய்திகள் வந்தன.

இதுகுறித்து லைகா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது… “கொடி படம் சம்பந்தமாக எந்தவிதமான பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. அதன் வெளியீட்டு உரிமையை பெறவில்லை.

தற்போது ரஜினியின் 2.0, ஜி.வி.பிரகாஷின் ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’, விஜய் ஆண்டனியின் ‘எமன்’, கமல் – ஸ்ருதி இணைந்து நடிக்கும் படம் ஆகிய படங்களை மட்டுமே தயாரித்து வருகிறோம்” என்றார்.

தனுஷ் தயாரித்த ‘நானும் ரௌடிதான்’ மற்றும் ‘விசாரணை’ ஆகிய படங்களை லைகா நிறுவனம் வெளியிட்டது இங்கே கவனிக்கத்தக்கது.