சசிகுமார் படத்தை வாங்கிய ரஜினி பட நிறுவனம்..!


சசிகுமார் படத்தை வாங்கிய ரஜினி பட நிறுவனம்..!

‘தாரை தப்பட்டை’ படத்தை தொடர்ந்து சசிகுமார் நடிப்பில் வெளியீட்டுக்கு தயாராகியுள்ள படம் ‘வெற்றிவேல்’.

வசந்தமணி இயக்கியுள்ள இப்படத்தில் மியா ஜார்ஜ், பிரபு, தம்பி ராமையா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கதிர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு இசை இமான்.

இப்படத்தின் கதைக்களமாக தஞ்சாவூரை முடிவுசெய்த இயக்குனர், இதன் படப்பிடிப்பை ஒரே கட்டமாக தஞ்சாவூரை சுற்றியுள்ள பகுதிகளில் முடித்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் வெளியீட்டு உரிமையை பிரபல லைகா நிறுவனம் பெற்று உள்ளதாக கூறப்படுகிறது.

இதே நிறுவனம்தான் ரஜினியின் ‘2.0’ படத்தையும் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.