நடிகர் சங்கத்திற்கு ரூ 1 கோடி வழங்கிய லைக்கா சுபாஸ்கரன்..!


நடிகர் சங்கத்திற்கு ரூ 1 கோடி வழங்கிய லைக்கா சுபாஸ்கரன்..!

கமல்-ஸ்ருதி நடிப்பில் உருவாகவிருக்கும் புதிய படம் “சபாஷ் நாயுடு’.

இப்படத்தை லைகா நிறுவனமும், ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.

இதற்கான தொடக்க விழா, நேற்று நடிகர் சங்க வளாகத்தில் நடைபெற்றது. இதில் கமல், இளையராஜா, லைக்கா நிறுவன அதிபர் சுபாஸ்கரன் மற்றும் கருணாமூர்த்தி, ராஜு மஹாலிங்கம் ஆகியோருடன் நடிகர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அப்போது, நடிகர் சங்க நிதிக்காக சுபாஸ்கரன் ரூ. 1 கோடிக்கான காசோலையை நடிகர் சங்க தலைவர் நாசரிடம் வழங்கினார்.

நடிகர் சங்க நிர்வாகிகள், சுபாஸ்கரனுக்கு நன்றி தெரிவித்தனர்.