தனுஷ்-வெற்றிமாறனோடு கைகோர்க்கும் ரஜினி பட நிறுவனம்.!


தனுஷ்-வெற்றிமாறனோடு கைகோர்க்கும் ரஜினி பட நிறுவனம்.!

பொல்லாதவன், ஆடுகளம் படங்களில் இணைந்த தனுஷ், வெற்றிமாறன் ஆகிய இருவரும் தற்போது இணைந்து படங்களை தயாரித்து வருகின்றனர். இதில் ஆடுகளம் ஆறு தேசிய விருதுகளை பெற்றது.

இவர்கள் இருவரும் இணைந்து தயாரித்த காக்கா முட்டை, தேசிய விருதையும் வென்று, கமர்ஷியல் ரீதியாக பெரும் வெற்றிப் பெற்றது.

பின்னர் தன் வுண்டர்பார் நிறுவனம் சார்பாக தனுஷ் தயாரித்து, வெற்றிமாறன் இயக்கிய விசாரணை படமும் மூன்று தேசிய விருதுகளை வென்றது.

இவர்கள் இணைந்தாலே அது நிச்சயம் தேசிய விருதை அள்ளும் என்று ரசிகர்கள் கணிக்கும் அளவில் தரமான படைப்புகளை கொடுத்து வருகின்றனர்.

தற்போது, தனுஷ், வெற்றிமாறன் இணைந்து வடசென்னை படத்தை தயாரிக்கின்றனர். இதில் தனுஷ் ஜோடியாக சமந்தா நடிக்கிறார்.

இந்நிலையில், இக்கூட்டணியில் ரஜினியின் 2.0 படத்தை தயாரித்து வரும் லைகா நிறுவனமும் இணைந்துள்ளதாம்.

மூவரின் கூட்டணியில் மிகப்பிரம்மாண்டமான முறையில் இப்படம் உருவாகவுள்ளது.