“கடவுள் இருக்கான்; சந்தானம் இல்லை” -ராஜேஷ் விளையாட்டு


“கடவுள் இருக்கான்; சந்தானம் இல்லை” -ராஜேஷ் விளையாட்டு

எஸ்எம்எஸ்-ஐ வைத்துக்கொண்டு தமிழ் சினிமாவுல லிப்ட் ஆனவர் இயக்குனர் ராஜேஷ்.

அதன்பிறகு இவர் இயக்கிய ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ மற்றும் ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ ஆகிய இருபடங்களும் இவரை ஜெட் வேகத்தில் உயரத்தில் வைத்தது. அடுத்து அடித்த ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ ‘விஎஸ்ஓபி’ ரெண்டு பாலும் பவுண்டரி லைனில் பஞ்சராகி படுத்துவிட்டது.

சரக்குப் படமோ, பாவம்! தயாரிப்பாளர் ஆர்யாவின் முதலுக்கே மோசமானது.

என்ன பண்ணுவது என கையைப் பிசைந்துகொண்டிருந்தவருக்கு ஆபத்பாந்தவனாகியிருக்கிறார் ஜி வி பி.

தற்போது ஜி.வி. பிரகாஷை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கவிருக்கிறார் ராஜேஷ். ‘கடவுள் இருக்கான் குமாரு’ என்று இப்படத்துக்கு தலைப்பிட்டுள்ளனர். அம்மா கிரியேஷன்ஸ் சிவா இப்படத்தை தயாரிக்கிறார்.

இதுநாள் வரை சந்தானத்துடன் பயணித்த ராஜேஷ், இப்படத்தில் சந்தானத்தை கழட்டி விட்டுள்ளார். “கடவுள் இருக்கான்; அதனால யார் இருந்தால் என்ன இல்லாட்டி என்ன? என்ற முடிவில் சந்தானம் இல்லாமல் முதன்முறையாகக் களம் காண்கிறார் ராஜேஷ்.

செல்வராகவன் இயக்கி, தனுஷ் நடித்த ‘புதுப்பேட்டை’ படத்தில் வரும் பிரபலமான வசனம்தான் இப்படத்தலைப்பாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.