‘நவரச திலகம்’ படத்தில் ஸ்ருஷ்டி ஜோடியாக மா.கா.பா.ஆனந்த்!


‘நவரச திலகம்’ படத்தில் ஸ்ருஷ்டி ஜோடியாக மா.கா.பா.ஆனந்த்!

‘விஜய் டிவி’ வெள்ளித்திரைக்கு தந்திருக்கும் நட்சத்திரங்களில் மா.கா.பா. ஆனந்தும் ஒருவர். ‘வானவராயன் வல்லவராயன்’ படத்தில் அறிமுகமான இவர் இன்று நிறைய படங்களில் நடித்து வருகிறார். ‘பஞ்சு மிட்டாய்’, ‘அட்டி’, ‘தீபாவளி துப்பாக்கி’ போன்ற படங்களை தொடர்ந்து தற்போது ‘நவரச திலகம்’ என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் மா.கா.பா.ஆனந்த் ஜோடியாக ‘மேகா’, ‘டார்லிங்’ ‘எனக்குள் ஒருவன்’ உள்ளிட்ட படங்களில் நடித்த ஸ்ருஷ்டி நடிக்கிறார். இவர்களுடன் கருணாகரன், ஜெயபிரகாஷ், இளவரசு, பாவா லட்சுமணன், மீராகிருஷ்ணன், லஷ்மி, மகாதேவன் ஆகியோர் நடிக்கிறார்கள். வித்தியாசமான வேடம் ஒன்றில், ’இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ’வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ போன்ற படங்களின் இசையமைப்பாளர் சித்தார்த் விபின் நடிக்கிறார்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் காம்ரன். இவர் ராஜ்கபூர், பூபதிபாண்டியன், எஸ்.எஸ்.ஸ்டான்லி ஆகியோரிடம் இணை இயக்குனராகப் பணியாற்றியவர். படம் பற்றி இயக்குநர் காம்ரன் நம்மிடம் கூறியதாவது…

“நம்மை சுற்றிலும் நண்பர்கள் என்கிற பெயரில் சில நவரச திலகங்கள் இருப்பார்கள். அப்படிப்பட்ட ஒரு நண்பனின் வாழ்கையில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்கள் தான் இந்த படத்தின் கதை. இதை 90 சதவீதம் காமெடி கலந்து பேமிலி என்டர்டெயின்மென் படமாக உருவாக்கி வருகிறோம்” என்றார்.