மாரி இயக்குனர் பாலாஜி மோகன் விவாகரத்து…!


மாரி இயக்குனர் பாலாஜி மோகன் விவாகரத்து…!

காதலில் சொதப்புவது எப்படி, வாயை மூடி பேசவும் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் பாலாஜி மோகன்.

மாரி படத்தை இயக்கிய பின் தனுஷ் ரசிகர்களிடையே மாஸ் ஆனார்.

இந்நிலையில் இவர் இவரது மனைவி அருணாவை விவாகரத்து செய்துள்ளார்.

இதுதொடர்பாக ட்விட்டர் பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது…

அனைவருக்கும் என் விவாகரத்து குறித்து கூற விரும்புகிறேன். அதனை நீங்கள் வதந்திகளாக அறிவதற்கு முன்னால்.

கருத்துவேறுபாடுகள் காரணமாக 3 வருடம் முன்பே மனைவியை பிரிந்துவிட்டேன். தற்போது சட்டபூர்வமான நடவடிக்கைகளும் முடிந்துவிட்டன.

நாங்கள் இருவரும் அவரவர் வழியில் செல்கிறோம்” என தெரிவித்துள்ளார்.