எம்ஜிஆரை விடாத விஷால்; திட்டமிட்டு நடக்கும் அடுத்தக் கட்ட வேலைகள்!


எம்ஜிஆரை விடாத விஷால்; திட்டமிட்டு நடக்கும் அடுத்தக் கட்ட வேலைகள்!

விஷால் அடுத்தடுத்து தன்னுடைய படங்களை வெளியிடும் முயற்சியில் இருக்கிறார் விஷால்.

பாண்டிராஜ் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள கதகளி படம் 2016 ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கு முன்பே ஒரு படத்தை வெளியிடும் முயற்சியில் இறங்கியுள்ளார் விஷால். சுந்தர் சி இயக்கி இரண்டு வருடங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ள மதகஜ ராஜா (எம்ஜிஆர்) படத்தை வெளியிட தீவிர முயற்சியில் இறங்கியிருக்கிறாராம் விஷால். இப்படத்தை கிறிஸ்துமஸ் தினத்தில் கொண்டு வரவும் திட்டமிட்டு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

பிரச்சனைகள் எல்லாம் சுமூகமாக முடியும் என்றால் விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்படுகிறது. இப்படத்தில் விஷாலுடன் அஞ்சலி மற்றும் வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.