ரஜினி பிறந்த நாளைக் குறிவைக்கும் விஷால்??


ரஜினி பிறந்த நாளைக் குறிவைக்கும் விஷால்??

முதலில் ரஜினியின் படத்தலைப்புகளை குறி வைத்தனர். பின்னர் அவரது படங்களை ரீமேக் செய்ய குறிவைத்தனர். தற்போது ரஜினியின் பிறந்தநாளை குறி வைக்க ஆரம்பித்து விட்டார்களோ? என எண்ணத் தோன்றுகிறது.

ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு ரஜினி பிறந்தநாளில் ஷங்கர் இயக்கிய ‘சிவாஜி’ படத்தின் 3டி பதிப்பை வெளியிட்டது ஏவிஎம் நிறுவனம். அதுபோல கடந்த வருடம் ரஜினியின் பிறந்தநாளில் அவரது ‘லிங்கா’ படத்தை வெளியிட்டார் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ்.

தற்போது இவ்வருடம் ரஜினி பிறந்தநாளையொட்டி டிசம்பர் 11ஆம் தேதி (ரஜினி பிறந்தநாள் டிச. 12) ஓரிரு படங்கள் வெளியாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இத்தினத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ‘ரஜினிமுருகன்’ வெளியாகும் என கூறப்படுகிறது. இதில் மாறுதல் இருக்கலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது இதே தினத்தில் நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த சுந்தர் சி இயக்கி விஷால் நடித்த ‘மத கஜ ராஜா’ (எம்ஜிஆர்) படம் வெளியாகும் என தெரிய வந்துள்ளது. அதற்கான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்டவர்கள் முடுக்கிவிட்டுள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.