பிரம்மாண்ட கூட்டணியில் இணையும் மாதவன்-துல்கர்..!


பிரம்மாண்ட கூட்டணியில் இணையும் மாதவன்-துல்கர்..!

நடிகர், இயக்குனர், கதாசிரியர் என பன்முகம் கொண்டவர் பிரதாப் போத்தன். ‘மீண்டும் ஒரு காதல் கதை’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். சிவாஜி கணேசன், மோகன்லால் நடித்த ‘ஒரு யாத்ரா மொழி’ என்ற படத்தை இறுதியாக இயக்கினார்.

தற்போது 20 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு படத்தை இயக்கவிருக்கிறார். இதில் மாதவன் மற்றும் துல்கர் சல்மான் இருவரும் நாயகர்களாக நடிக்கிறார்கள்.

இளையராஜா இசையமைக்க, ராஜீவ் மேனன் ஒளிப்பதிவு செய்கிறார். ‘பெங்களூர் டேஸ்’ படப்புகழ் இயக்குனர் அஞ்சலி மேனன் திரைக்கதை எழுதுகிறாராம்.

இப்படம் மலையாளத்தில் உருவாக்கப்பட்டாலும் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் டப் செய்யப்படும் என கூறப்படுகிறது. ‘Love In Anjengo’ என்று பெயரிடப்பட்ட இப்படம் மே அல்லது ஜூன் மாதம் தொடங்கப்படவுள்ளது.