இறுதிச்சுற்று… இப்போ மாதவனின் ஆரம்பச்சுற்று ஆனது…!


இறுதிச்சுற்று… இப்போ மாதவனின் ஆரம்பச்சுற்று ஆனது…!

அலைபாயுதே படத்தில் ஆரம்பித்த மாதவன் அலை, தமிழக இளைஞர் வட்டத்தை ஒரு கலக்கு கலக்கியது.

அதன்பின்னர் அந்த அலை அமைதி கொண்டதோ என்னவோ, பெரிய படங்கள் மாதவனுக்கு அமையவில்லை.

நீண்ட இடைவேளைக்கு பிறகு இறுதிச்சுற்று படத்தை தயாரித்து நடித்தார் மாதவன்.

தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான இப்படம் நாயகி ரித்திகா சிங்குக்கு தேசிய விருதை பெற்றுத் தந்தது.

இவ்வெற்றியைத் தொடர்ந்து மாதவன், தன் அடுத்த சுற்றை ஆரம்பித்து இருக்கிறார்.

விரைவில் புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறாராம்.

மேலும் கரு. பழனியப்பன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க மாதவன் தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.