கமலுடன் நடிக்க மறுத்த ரஜினி மகள், விஜய்சேதுபதியுடன் நடிக்கிறார்..!


கமலுடன் நடிக்க மறுத்த ரஜினி மகள், விஜய்சேதுபதியுடன் நடிக்கிறார்..!

நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் ஒய்ஜி மகேந்தின் இருவரும் உறவினர்கள்.

ரஜினியின் மனைவி லதா வழி உறவினர் ஒய்ஜி மகேந்திரன் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

பல படங்களில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.

இந்நிலையில், ஒய்.ஜி.மகேந்திரனின் மகள் மதுவந்தி அருண் என்பவர் தன் தந்தையே போன்றே நாடகங்களை அரங்கேற்றி வருபவர்.

`சிவசம்போ, மற்றும் ‘பெருமாளே’ ஆகிய நாடகங்களை அரங்கேற்றிய இவர் தற்போது மூன்றாவது படைப்பாக ‘இ.வா.க.’ எனும் நாடகத்தையும் அரங்கேற்றவுள்ளார்.

இதனிடையில், சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி, தமன்னா நடிக்கும் தர்மதுரை படத்தில் நடித்து வருகிறார்.

இதனையடுத்து, ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்திலும் நடிக்கவிருக்கிறாராம்.

தன் சினிமா பயணம் குறித்து அவர் சமீபத்திய பேட்டியில் கூறியதாவது…

“என் சித்தப்பா ரஜினி ‘முத்து’ படத்தில் நடிக்க அழைத்தார். அதன்பின்னர் ‘ஹே ராம்’ படத்தில் நடிக்க கமல் சாரும் அழைத்தார். ஆனால் அப்போ எங்க வீட்ல யாரும் சம்மதிக்கல.

ஆனா, அப்போ நழுவிப்போன சினிமா வாய்ப்பு இப்போ கிடைச்சிருக்கு. ‘தர்மதுரை’ படத்துல நடிக்கிறேன்.

என் சித்தப்பாகிட்ட சொன்னேன். நல்லது. சீனுராம சாமி குட் டைரக்டர், நல்லா பண்ணும்மா’ன்னு சொன்னார்.

இதுவே எனக்கு கிடைத்த ஆசீர்வாதமாக கருதுகிறேன்” என்றார்.