‘பீப்’ சாங் ப்ராப்ளம்… எஸ்கேப் ஆகும் சிம்பு, அனிருத் பிரதர்ஸ்?


‘பீப்’ சாங் ப்ராப்ளம்… எஸ்கேப் ஆகும் சிம்பு, அனிருத் பிரதர்ஸ்?

பீப் பாடலை கேட்காதவர்களையும் கேட்க வைத்துவிடும் போல தற்போது நடந்து வரும் பிரச்சினைகள். அப்படி என்னதான் அப்பாடலில் இருக்கிறது? எதற்காக இவ்வளவு ஆர்ப்பாட்டம்? என்கிற ஆர்வத்தில் பாடலை கேட்காதவர்களும் கேட்க துடிக்கின்றனர்.

இப்பாடலை பாடிய சிம்பு மற்றும் அனிருத் ஆகியோர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, இதுகுறித்து விளக்கமளிக்க இன்று (டிச. 19ஆம்) நேரில் ஆஜராக வேண்டும் என இருவருக்கும் சம்மன் அனுப்பியிருந்தனர் கோவை போலீசார்.

இதனிடையில் சிம்பு தரப்பில் சம்மனுக்கு தடை விதிக்க கோரிக்கை விடுத்தனர். ஆனால் இதனை மறுத்த சென்னை உயர் நீதிமன்றம் வழக்கு விசாரணையை ஜனவரி 5ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

எனவே, இன்று ஆஜராக வேண்டிய சூழ்நிலையில், “காவல் நிலையத்தில் ஆஜராக கூடுதல் அவகாசம் வேண்டும் என சிம்பு தரப்பில் கோவை, ரேஸ்கோர்ஸ் சி2 காவல் நிலையத்தில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. இவரைத் தொடர்ந்து அனிருத் தரப்பிலும், “இப்பாடலுக்கும் அவருக்கும் சம்பந்தம் இல்லை” என விளக்க கடிதம் அளித்துள்ளனர்.