‘ரஜினி, கடவுளுக்கு நிகரானவர்..’ – கபாலி வில்லன் ‘மைம்’ கோபி


‘ரஜினி, கடவுளுக்கு நிகரானவர்..’ – கபாலி வில்லன் ‘மைம்’ கோபி

தான் இயக்கிய ‘அட்டக்கத்தி’ மற்றும் ‘மெட்ராஸ்’ படங்களில் பணியாற்றிய பலரையும் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் பணியாற்ற வைத்து அவர்களின் புண்ணியத்தை சேர்த்து வருகிறார் பா. ரஞ்சித்.

தினேஷ், கலையரசன், சந்தோஷ் நாராயணன், ரித்விகா உள்ளிட்டோரை தொடர்ந்து மெட்ராஸ் படத்தில் அறிமுகப்படுத்திய ‘மைம்’ கோபியையும் ‘கபாலி’ படத்தில் நடிக்க வைத்து விட்டார். ரஜினியுடன் நடித்த இனிய அனுபவங்கள் குறித்து மைம் கோபி கூறுகையில்…

“நான் நடிகனாக நிற்பதற்கு டைரக்டர் ரஞ்சித் தான் காரணம். இப்போது கபாலி படத்தில் ரஜினி சாருடன் வில்லனாக மோதுகிறேன். இது என் வாழ்வில் கிடைத்த மிகப் பெரிய வாய்ப்பு.

மிகப்பெரிய நடிகர் ரஜினி சார். வளர்ந்து வரும் எங்களின் நடிப்பை அவர் பாராட்டுவது எங்களுக்கு ஆச்சரியமாகவும், உற்சாகமாகவும் இருக்கிறது. பாராட்டுவதற்கே ஒரு மனசு வேண்டும். அது ரஜினி சாரிடம் இருக்கிறது. பாராட்டத் தெரிந்தவர்கள் கடவுளுக்கு நிகரானவர்கள்.

பிப்ரவரி 5ஆம் தேதி மீண்டும் மலேசியாவில் கபாலி படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் நாளுக்காக காத்திருக்கிறேன்” என்றார்.