‘ரஜினி படத்தை எடுக்க கமல் உதவினார்..’ தெறி வில்லன் உருக்கம்..!


‘ரஜினி படத்தை எடுக்க கமல் உதவினார்..’ தெறி வில்லன் உருக்கம்..!

ஜிஎன்ஆர். குமரவேலன் இயக்கத்தில் விக்ரம்பிரபு நடித்துள்ள வாகா படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா இன்று நடைபெற்றது. பாடல்களை கமல் வெளியிட இயக்குனர் மகேந்திரன் பெற்றுக் கொண்டார்.

விழாவில் இயக்குனர் மகேந்திரன் பேசியதாவது…

“இங்கு பேசியவர்கள் பலரும், அவர்களுடைய உயர்ந்த நிலைக்கு காரணம் கமல்தான் என்றார்கள். நான் இந்த இடத்தில் நிற்பதற்கும் அந்த மகாகலைஞன்தான் காரணம்.

ரஜினி நடித்த முள்ளும் மலரும் படத்தை நான் இயக்க தயாரானபோது, பாலுமகேந்திராவை கமல்தான் அறிமுகப்படுத்தினார்.

படம் முடிவும் தருவாயில் இருந்தபோது எங்களுக்கும் தயாரிப்பாளருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், இதற்குமேல் ஒரு பைசா கூடச் செலவழிக்கமாட்டேன் என்று தயாரிப்பாளர் சொல்லிட்டார்.

அப்போது கமலின் உதவியைத்தான் தேடி போனேன். அப்போதும் கமலே அந்தக் காட்சிக்கான மொத்தச் செலவையும் ஏற்றார். கமல் உதவி செய்யவில்லையென்றால், முள்ளும் மலரும் வந்திருக்காது.

நானும் இப்போது உங்கள் முன் இப்படி நிற்கமுடியாது. அவருக்கு என் நன்றியை இந்த தருணத்திலும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

இவர் முதன் முதலாக நடித்த தெறி படம் இவருக்கு பெரும் புகழைப் பெற்று தந்து, வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.