முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபுவுக்கு வில்லனாக சூர்யா..!


முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபுவுக்கு வில்லனாக சூர்யா..!

‘பிரம்மோத்சவம்’ படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் மகேஷ்பாபு.

மிகப்பிரம்மாண்டமாக உருவாகவுள்ள இப்படத்தின் கலைஞர்கள் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.

இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இருமொழிகளில் தயாராகவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் வில்லனாக நடிக்கவிருக்கிறாராம் இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே. சூர்யா.

தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் ‘இறைவி’ படத்தில் நடித்து வருகிறார் எஸ்.ஜே. சூர்யா. இப்படத்திலும் இவர் நெகட்டிவ் கேரக்டர் ஏற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையில் பவன்கல்யாண் நடிப்பில் ‘குஷி 2′ படத்தையும் எஸ் ஜே சூர்யா இயக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தகது.