படம் நேற்று ரிலீஸ்.. இன்று ராஜேஷ் பிள்ளை மரணம்… அதிர்ச்சியில் திரையுலகம்..!


படம் நேற்று ரிலீஸ்.. இன்று ராஜேஷ் பிள்ளை மரணம்… அதிர்ச்சியில் திரையுலகம்..!

‘ஹிருதயத்தில் சூஷிகன்’ என்ற படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகி ‘டிராபிக்’ என்ற மாபெரும் சூப்பர் டூப்பர் ஹிட் படத்தை கொடுத்தார் ராஜேஷ் பிள்ளை. இந்த படம்தான் தமிழில் ‘சென்னையில் ஒரு நாள்’ என்ற பெயரில் ரீமேக் ஆனது.

கடந்த ஆண்டு நிவின்பாலி, அமலா பால் நடித்த ‘மிலி’ என்ற படத்தையும் இவர் இயக்கிருந்தார். இவரின் இயக்கத்தில் வெட்டா என்ற படம் நேற்று கேரளாவில் வெளியானது. இந்நிலையில் கல்லீரல் பாதிப்பு காரணமாக கொச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடல் நிலை மோசமடைந்ததை தொடர்ந்து இன்று காலை மரணமடைந்தார்.

வெட்டா படத்தின் படப்பிடிப்பின் போதே இவருக்கு இந்த பிரச்சினை இருந்துள்ளதால் அடிக்கடி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையும் பெற்று வந்தாராம். இருந்தபோதிலும், தன் உடல்நிலை பாராமல் படத்தை முடித்துக் கொடுத்து ரிலீஸ் செய்து மறுநாளே மரணமடைந்துள்ளார்.

ஒரு திறமையான கலைஞரை இழந்துள்ள மலையாள திரையுலகம் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.