‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..!


‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..!

கபாலி தரிசனத்திற்காக 30 நாட்கள் காத்திருக்க வேண்டுமே என்று ரஜினி ரசிகர்கள் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.

இவர்களின் தவிப்பை உணர்ந்த மலேசியா விநியோகஸ்தர், ரஜினி ரசிகர்களுக்கு ஆறுதலாக பல விஷயங்களை பல வடிவங்களில் செய்து வருகிறார்.

முதலில் பிரபல திரையங்கில் கபாலி பாப்கார்ன் விற்கப்பட்டது.

தற்போது ஓரிரு தினங்களாக ஒரு மினி லாரி முழுவதும் கபாலி போஸ்டர்கள் ஒட்டப்பட்டு, நகரில் உலா வருகிறது.

இதற்கெல்லாம் ஒரு படி மேலே தற்போது ரஜினி உருவப்படம் கொண்ட கபாலி ஸ்டாம்ப் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

இதனால் மகிழ்ச்சி வெள்ளத்தில் இருக்கிறார்களாம் மலேசியா மக்கள்.