ரிலீஸ் தேதியே கன்பார்ம் ஆகல… ஆனாலும் ‘கபாலி’ சாதனை…!


ரிலீஸ் தேதியே கன்பார்ம் ஆகல… ஆனாலும் ‘கபாலி’ சாதனை…!

கடந்த வாரம் கபாலி படத்தின் டப்பிங் பணிகளை ரஜினி முடித்தார். இதனைத் தொடர்ந்து டீசரின் வெளியிட்டு தேதி உறுதியானது.

நாளை காலை 11 மணிக்கு டீசர் வெளியாகவுள்ளதால், யூடிப்புக்கே எச்சரிக்கை விடுக்கும் வகையில் ரசிகர்கள் தங்கள் ட்ரெண்ட்டிங் பணிகளை தற்போதே ஆரம்பித்து விட்டனர்.

இதன் பாடல்கள் மற்றும் ட்ரைலர் தேதி இன்னும் முடிவாகவில்லை. மேலும் படத்தின் ரிலீஸ் தேதியும் இதுவரை உறுதியாகவில்லை.

ஆனால் படத்தின் வியாபாரம் தற்போதே சூடு பிடிக்க ஆரம்பித்துவிட்டது.

இந்தோனேஷியா நாட்டில் 300க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் இப்படம் ரிலீஸ் ஆகவுள்ளது.

இதுவரை எந்த ஒரு இந்திய திரைப்படமும் இந்தோனேஷியாவில் இத்தனை அரங்குகளில் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மலேசியாவில் கபாலி உரிமையை பெற்றுள்ள மாலிக் என்பவர் 320 தியேட்டர்களில் இப்படத்தை வெளியிடவிருக்கிறாராம்.