மணிரத்னம் படங்களில் ‘தாலி’ சென்டிமெண்ட்!


மணிரத்னம் படங்களில் ‘தாலி’ சென்டிமெண்ட்!

சினிமாவையும் தாலி சென்டிமெண்டையும் அவ்வளவு எளிதில் பிரித்து விடமுடியாது. தெலுங்கு படங்களைப் போல நிறைய தமிழ் படங்களும் தாலியின் மகிமையை பற்றி சொல்லி இருக்கின்றன. ராமநாராயணன், பி. வாசு, கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பல இயக்குனர்கள் தாலி சென்டிமெண்டை கொண்டு பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளனர்.

இதில் இயக்குனர் மணிரத்னமும் விதிவிலக்கல்ல. ஆனால் இவர் சொல்லும் விதம்தான் மற்ற இயக்குனர்களிடம் இருந்து இவரை வேறுபடுத்தி காட்டியிருக்கும். தாலி கட்டிக் கொள்ளாமல் தாம்பத்யம் நடத்தும் ‘ஓ காதல் கண்மணி’ படத்தில் இன்றைய நவீன காதலை சொன்ன மணிரத்னம் இதற்கு முன்பு தாலி பற்றி சொன்ன படங்கள் என்னென்ன என்பது குறித்த ஒரு ட்ரெண்ட் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அது பற்றிய ஓர் பார்வை…

தாலி கட்டியும் பிடிக்காமல் வாழ்வது… மௌன ராகம்

பள்ளி மாணவிக்கு தாலி கட்டினால்… நாயகன்

ஒருத்திக்கு தாலி கட்டிவிட்டு இருவருடன் சேர்ந்து வாழ்ந்தால்… அக்னி நட்சத்திரம்

தாலி கட்டிய மனைவிக்கு தெரியாமல் குழந்தையை வளர்த்தால்… அஞ்சலி

கணவனை கொன்றுவிட்டு அவன் மனைவிக்கு தாலி கட்டினால்… தளபதி

தாலி கட்டிய கணவருக்காக போராடினால்… ரோஜா

ஒரு பெண்ணுக்கு இரண்டு பேர் தாலி கட்ட நினைத்தால்… திருடா திருடா

வேறு மதம் சார்ந்த பெண்ணை காதலித்து நிக்காஹ் செய்தால்… பம்பாய்

தாலி கட்டி விட்டு அவரவர் வீட்டில் வாழ்ந்தால்… அலைபாயுதே

இன்னொருவன் தாலி கட்டிய பெண்ணை கடத்தி கொண்டு போனால்… ராவணன்

தாலி கட்டலாமா என யோசித்தால்… கடல்

தாலி கட்டாமல் தாம்பத்யம் நடத்தினால்… ஓ காதல் கண்மணி