மணிரத்னம்-கார்த்தி இணையும் படம் ‘ரோஜா 2’…


மணிரத்னம்-கார்த்தி இணையும் படம் ‘ரோஜா 2’…

தோழா படத்தை தொடர்ந்து காஷ்மோரா படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி. இதில் நயன்தாரா, விவேக் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

விரைவில் மணிரத்னம் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார்.

இதில் பிரேமம் படத்தில் அறிமுகமாகி கேரளா மற்றும் தமிழக ரசிகர்களின் நெஞ்சங்களை கொள்ளை கொண்ட சாய் பல்லவி, கார்த்தியின் ஜோடியாக நடிக்கிறார்.

இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளது. இதில் கார்த்தி பைலட்டாகவும், சாய் பல்லவி டாக்டராகவும் நடிக்கிறார்கள் என்று தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இப்படம் காஷ்மீர் தீவிரவாதிகளை மையப்படுத்தி உருவாக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

மணிரத்னம் இயக்கிய ரோஜா படமும் இதே கதைக்களத்தைதான் கொண்டு இருந்தது. எனவே புதிய படமும் இதே பாணியில் வருவதால், இது ரோஜா படத்தின் இரண்டாம் பாகமாக இருக்குமா? என கிசுகிசுக்கப்படுகிறது.