மஞ்சு சீசன் ஸ்டார்ட்., கீர்த்தி சீசன் அதுக்குள்ளவா முடிஞ்சிபோச்சி??


மஞ்சு சீசன் ஸ்டார்ட்., கீர்த்தி சீசன் அதுக்குள்ளவா முடிஞ்சிபோச்சி??

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் ‘அச்சம் என்பது மடமையடா’. இப்படத்தில் சிம்புவின் ஜோடியாக மஞ்சிமா மோகன் அறிமுகமாகிறார். இசை ஏ. ஆர். ரஹ்மான்.

இதில் இடம்பெற்ற தள்ளிப் போகாதே என்ற பாடல் சமீபத்தில் வெளியாகியது.

இப்பாடலில் தோன்றிய மஞ்சிமா நடித்து ஒரு படம் கூட வெளிவராத நிலையில் தற்போது மட்டும் மூன்று படங்களை தன் கைவசம் வைத்துள்ளார்.

இதனையடுத்து விக்ரம் பிரபுவுடன் ஒரு படத்தில் நடிக்கிறார். யுவன் இசையமைக்க, எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்குகிறார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பாக ஜி.தியாகராஜன் இப்படத்தை தயாரிக்கிறார்.

இதனைத் தொடர்ந்து தற்போது உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதில் உதயநிதியின் ஜோடியாக நடிக்கிறார் மஞ்சிமா.

இவர்களுடன் முக்கிய வேடத்தில் விஷ்ணு நடிக்க, அவருக்கான ஜோடி தேர்வு நடைபெற்று வருகிறது. சுசீந்திரன் இயக்குகிறார். இசைக்கு இமான், ஒளிப்பதிவுக்கு மதி. இப்படத்தின் பூஜை இன்று காலை நடைபெற்றது. மார்ச் முதல் இதன் படப்பிடிப்பு துவங்குகிறது.

கீர்த்தி சீசன் அதுக்குள்ளவா முடிஞ்சிபோச்சி?? மஞ்சு சீசன் தொடங்கிருச்சு.