விஜய்சேதுபதி-டி.ஆருடன் இணையும் சிம்பு பட நாயகி..!


விஜய்சேதுபதி-டி.ஆருடன் இணையும் சிம்பு பட நாயகி..!

‘அனேகன்’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஏ.ஜி.எஸ் நிறுவனத்திற்காக கே.வி.ஆனந்த் புதிய படத்தை இயக்கவிருக்கிறார்.

இதில் எவரும் எதிர்பாரா விதமாக விஜய் சேதுபதி மற்றும் டி.ராஜேந்தர் இணைந்து நடிக்கின்றனர். ஹிப் ஹாப் தமிழா இசையமைக்கிறார்.

கதை, திரைக்கதை, வசனத்தை எழுத்தாளர்கள் சுபா அமைகின்றனர்.

இந்நிலையில், நாயகி வேடத்துக்கு தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வந்தது. தற்போது மஞ்சிமா மோகன் கமிட் ஆகவுள்ளதாக கூறப்படுகிறது.

கௌதம் மேனன் இயக்கி வரும் அச்சம் என்பது மடமையடா படத்தில் சிம்புவின் ஜோடியாக நடித்து வருபவர்தான் மஞ்சிமா மோகன் என்பது குறிப்பிடத்தக்கது.