சூர்யாவுடன் இணையும் திலீப்பின் முன்னாள் மனைவி மஞ்சுவாரியர்


சூர்யாவுடன் இணையும் திலீப்பின் முன்னாள் மனைவி மஞ்சுவாரியர்

மலையாள திரையுலகின் முன்னணி கதாநாயகியாக 18 வருடங்களுக்கு முன்பு வலம் வந்தவர் நடிகை மஞ்சுவாரியர். இவர் தன்னுடன் நடித்த நடிகர் திலீப்பை காதலித்து திருமணம் செய்தார்.  இவர்களுக்கு மீனாட்சி என்ற மகள் இருக்கிறார்.  16 வருடங்களுக்கு பிறகு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தற்போது பிரிந்து விட்டனர்.

சமீபத்தில் இவரது ரீஎன்ட்ரி படமான ‘ஹவ் ஓல்ட் ஆர் யூ’ மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்தப்படத்தின் தமிழ் ரீமேக்கில் அவரைப் போல ஜோதிகாவும் ரீ என்ட்ரி ஆகி நடித்து முடித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது நடிகர் சூர்யாவின் தயாரிப்பில் மஞ்சுவாரியர் ஒரு படம் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இப்படத்தை பசங்க இயக்குனர் ‘பாண்டிராஜ்’ இயக்கவுள்ளார். இந்த படத்தில்தான் மஞ்சுவாரியர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது சிம்பு, நயன்தாரா மற்றும் சூரி நடித்து வரும் ‘இது நம்ம ஆளு’ படத்தை இயக்கி வருகிறார் பாண்டிராஜ். இந்த படத்தை முடித்தவுடன் மஞ்சுவாரியர் படத்தை இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மலையாள திரையுலகை கலக்கிய மஞ்சுவாரியருக்கு தமிழில் இதுதான் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.