சிம்பு, ஜி.வி. பிரகாஷுடன் இணைந்த ஜீரோ நாயகன் அஸ்வின்..!


சிம்பு, ஜி.வி. பிரகாஷுடன் இணைந்த ஜீரோ நாயகன் அஸ்வின்..!

கடந்த 40 ஆண்டுகளாக படங்களை தயாரித்தும் புதிய படங்களை வெளியிட்டும் வரும் நிறுவனம் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ்.

இந்தாண்டில் மட்டும் இதுவரை இவர்களின் வெளியீட்டில் ஐந்து படங்கள் வெளியாகியுள்ளன.

மேலும் இது நம்ம ஆளு, ஜாக்சன் துரை, வீரசிவாஜி, ப்ரூஸ் லீ, ஒரு நாள் கூத்து உள்ளிட்ட படங்களின் வெளியீட்டு உரிமையை இந்நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

தற்போது ஷிவ் மோஹா இயக்கத்தில் உருவாகியுள்ள ஜீரோ படத்தின் உரிமையையும் இது பெற்றுள்ளது. ‘மங்காத்தா’ அஸ்வின், ‘நெடுஞ்சாலை’ ஷிவதா மற்றும் ஜே.டி. சக்ரவர்த்தி உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார்.

இப்படம் வரும் மார்ச் 25-ம் தேதி திரைக்கு வருகிறது.