‘பிரேமம்’ வரிசையில் ‘மாப்ள சிங்கம்…’ அதிர்ச்சியில் கோலிவுட்..!


‘பிரேமம்’ வரிசையில் ‘மாப்ள சிங்கம்…’ அதிர்ச்சியில் கோலிவுட்..!

அறிமுக இயக்குனர் என்.ராஜசேகர் இயக்கத்தில் விமல், அஞ்சலி, சூரி நடித்துள்ள படம் ‘மாப்ள சிங்கம்.’. என் ஆர் ரகுநாதன் இசையமைத்துள்ள இப்படத்தில் அனிருத், சிவகார்த்திகேயன் இணைந்து ‘எதுக்கு மச்சான் காதல்…’ என்ற ஒரு பாடலை பாடியுள்ளனர்.

இப்படப் பாடல்கள் வெளியாகி ஹிட் அடித்துள்ள நிலையில் அடுத்த வாரம் மார்ச் 11ஆம் தேதி படம் வெளியாகவுள்ளது.

எனவே, இப்படத்தின் பிரதி சென்சாருக்கு சான்றிதழ் பெற வேண்டி அனுப்பப்பட்டது. ஆனால், அதற்குள் படத்தின் சென்சார் காப்பி இணையத்தில் வெளியாகியுள்ளது.

இதுபோல் கடந்த வருடம் பிரேமம் படத்தின் சென்சார் காப்பியும் இணையத்தில் லீக் ஆகியது குறிப்பிடத்தக்கது.

இப்படியாக சென்றால் திரையுலகை யார் காப்பாற்றுவது..?