‘நான் காதலிப்பவர் நேர்மாறானவர்.. அவருடன்தான் திருமணம்…’ – சமந்தா


‘நான் காதலிப்பவர் நேர்மாறானவர்.. அவருடன்தான் திருமணம்…’ – சமந்தா

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களின் முதல் சாய்ஸ் சமந்தா.

இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான தெறி, 24 ஆகிய படங்கள் வர்த்தக ரீதியாக பெறும் வெற்றிப் பெற்றுள்ளன.

ஓரிரு தினங்களுக்கு முன் மகேஷ் பாபுவுடன் நடித்த பிரமோற்சவம் படம் வெளியானது.

இந்நிலையில் இவர் ஐதராபாத்தில் அளித்துள்ள பேட்டியில் தன் திருமண வாழ்க்கை பற்றி கூறியுள்ளார். அதில்…

“காதலிக்கும் வயது என்றாலும் அந்த மனநிலையை தாண்டி திருமணம், குழந்தை என்ற மனநிலைக்கு தற்போது வந்துவிட்டேன்.

திருமணம் முடிந்தாலும், என் வயதுக்கேற்ற கேரக்டர்களை தேர்ந்தெடுத்து நடிப்பேன்.

நான் தற்போது ஒருவரை காதலித்து கொண்டிருக்கிறேன். அவரை விரைவில் திருமணம் செய்யவிருக்கிறேன்.

திருமண தேதியை அறிவிக்கும்போது அவரைப் பற்றி சொல்வேன். எனக்கும் அவருக்கும் பல வருடங்களாக பழக்கம்.

நான் ஜாலி டைப். அதே சமயம் கோபம் வந்தால், அதன் உச்சிக்கே சென்று விடுவேன். சில நேரம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது கூட தெரியாது.

ஆனால் நான் நேசிக்கும் அவர் எனக்கு நேர்மாறானவர். அவர் நன்றாக யோசித்து, தீர்க்கமான முடிவை எடுப்பார். பொறுமையானவர்.

எங்கள் காதலுக்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்துவிட்டனர்.”

என்று கூறியிருக்கிறார் சமந்தா.