சென்னை பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டும் ‘மருது’..!


சென்னை பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டும் ‘மருது’..!

முத்தையா இயக்கத்தில் உருவான மருது கடந்த மே 20ஆம் தேதி வெளியானது.

ராஜபாளையத்தின் கிராமத்து பின்னணியில் உருவாக்கப்பட்ட இப்படத்தில் விஷால், ஸ்ரீதிவ்யா, சூரி, ராதாரவி, ஆர் கே சுரேஷ், லீலா உட்பட பலர் நடித்திருந்தனர். இசை இமான்.

இப்படத்தின் சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரங்கள் தற்போது தெரிய வந்துள்ளது.

சென்னையில் மட்டும் திரையிடப்பட்ட 198 காட்சிகளின் மூலம் ரூ. 83.48 லட்சத்தை வசூலித்துள்ளது.

இதற்கு அடுத்த இடத்தை எக்ஸ் மேன் அபோகலிப்ஸ் என்ற ஆங்கில திரைப்படம் பெற்றுள்ளது. இது 150 காட்சிகளில் ரூ. 48 லட்சத்தை வசூல் செய்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, மகேஷ்பாபு நடித்த தெலுங்கு படமான பிரமோற்சவம் 132 காட்சிகளில் ரூ. 45 லட்சத்தை வசூல் செய்துள்ளது.

துல்கர் சல்மான் நடித்த கம்மாட்டிபாடம் 27 காட்சிகளில் ரூ. 5.40 லட்சத்தை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.