ரஜினி வழியில் விஜய்க்கும் மாஸ் ஓப்பனிங்!


ரஜினி வழியில் விஜய்க்கும் மாஸ் ஓப்பனிங்!

‘ராஜா ராணி’ என்ற ஒரு படத்தை மட்டுமே இயக்கிய தற்போது விஜய்யின் படத்தை இயக்கும் அளவுக்கு வளர்ந்து விட்டார் இயக்குனர் அட்லி. இவர் இயக்கும் ‘விஜய் 59’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 70% படப்பிடிப்புகள் முடிந்துவிட்டதாக செய்திகள் வந்துள்ளன.

இதனிடையில் விஜய்யின் சமீபத்திய படங்களில் அவருக்கு மாஸான ஓப்பனிங் பாடல் இல்லை. பாடல் காட்சிக்கு பதிலாக ஏதாவது ஒரு சண்டைகாட்சியே இடம் பெறுகிறது. இதற்கு ‘புலி’, ‘கத்தி’, ‘ஜில்லா’ படங்களே சிறந்த உதாரணம்.

எனவே ரஜினி படங்களை போன்று விஜய்க்கும் மாஸான அறிமுகப்பாடல் ஒன்றை வைத்துவிட்டாராம் அட்லி. அதன்படி ஒரு மாஸான பாடலை சமீபத்தில் படமாக்கியுள்ளார் அட்லி. இதில் விஜய், சமந்தா மற்றும் துணை நடிகர், நடிகைகளும் பங்கு பெற்று நடனமாடியுள்ளனர்.

‘புலி’ படத்தில் பிரம்மாண்டான செட் அமைத்த டி.முத்துராஜே இப்பாடலுக்கும் செட் அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்பாடலுக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.